காவேரிப்பட்டணம் அருகே லாரி ஓட்டுநரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், சேத்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (37) லாரி ஓட்டுநரான இவர், ஆத்தோரத்தான் கொட்டாய் என்ற இடத்தில் லாரியை சாலையோரமாக நிறுத்த முயன்றாபோது, அங்கிருந்த ஆட்டோ மீது லாரி மோதியதாம்.
இதனால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சண்முகத்துக்கும் தகராறு ஏற்பட்டதில் சண்முகம் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் ஆட்டோ ஓட்டுநர்களான பெரியாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (37), குமார் (30) ஆகியோர் கைது செய்யப்ப்டடனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.