Enable Javscript for better performance
செப்டம்பர் மாத மக்கள் தொடர்புத் திட்ட முகாம்கள்- Dinamani

சுடச்சுட

    

    செப்டம்பர் மாத மக்கள் தொடர்புத் திட்ட முகாம்கள்

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 21st September 2017 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் செப்டம்பர் மாத மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடைபெறும் இடம், தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
     இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
     செப்.27-ஆம் தேதி காலை 11 மணிக்கு பர்கூர் வட்டம், குருவிநாயனப்பள்ளி அடுத்த கன்னிகான் ஏரி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையிலும், கிருஷ்ணகிரி வட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பர்த்தி இருளர் காலனியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையிலும் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
     அதேபோல், செப்.28-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேன்கனிக்கோட்டை வட்டம், தளியை அடுத்த தேவர்பெட்டா கிராமத்தில் ஒசூர் சார் ஆட்சியர் தலைமையிலும், ஊத்தங்கரை வட்டம், காட்டேரி கிராமத்தில் கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையிலும், போச்சம்பள்ளி வட்டம், மாரப்பநாயக்கம்பட்டி கிராமத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையிலும், ஒசூர் வட்டம், மத்திகிரியை அடுத்த அச்செட்டிப்பள்ளி கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், சூளகிரி வட்டம், பேரிகையை அடுத்த பி.எஸ்.திம்மசந்திரம் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
     குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் இந்த முகாம்களில், பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai