தேன்கனிக்கோட்டை அருகே அய்யூரை அடுத்த உனிசெட்டி மலைக் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக மின் விநியோகம் சீராக இல்லையாம்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 11 மணி அளவில் அப்பகுதியில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள தொலைகாட்சிப் பெட்டிகள் வெடித்து சேதமடைந்தன.
இப் பகுதியில் ஏற்படும் மின்அழுத்த வேறுபாட்டைப் போக்கி சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.