Enable Javscript for better performance
அனுமதியின்றி கள் இறக்கியதாக 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மத்தூர் அருகே அனுமதியின்றி கள் இறக்கியதாக 2 பேரை மத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
    போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகேயுள்ள ஆம்பள்ளி கிராமத்தின் வழியாக மத்தூர் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் விடியற்காலை ரோந்து செல்லும் போது, அப்பகுதியில் கூட்டமாக இருந்த சிலர் ஓட்டம் பிடித்தனர். வண்டியை நிறுத்தி பார்த்த போது, கையில் குடம் மற்றும் மரம் ஏறும் இடு பொருள்களுடன் இருந்தவரை அழைத்து விசாரணை செய்ததில், அவர் அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை பெருமாள் (65), என்பதும் அனுமதியின்றி பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
    மேலும், ஆம்பள்ளியை அடுத்த கல்லேத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகன் சுப்பிரமணியும் (55), இவரும் அப் பகுதியில் கள் இறக்கியது தெரியவந்தது.
    இதையடுத்து, அவர்களிடமிருந்த கள் இறக்கும் இடுபொருள்கள், குடம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையிலடைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai