Enable Javscript for better performance
ஒசூரில் 3-ஆவது சிப்காட்: தொழில்துறை அமைச்சர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் 3-ஆவது மற்றும் 4-ஆவது சிப்காட் தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் எம.சி.சம்பத் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
    தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வியாழக்கிழமை கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் சால்வை அணிவித்து வரவேற்றார். அதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்காட் பகுதி 3, பகுதி 4 அமைப்பது தொடர்பாக கிருஷ்ணகிரி அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    இந்த ஆலோசனையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் வாசுகி, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், தொழில்துறை துணை செயலர் பாலசுப்பிரமணி மற்றும் சிப்காட் திட்ட அலுவலர் சி.வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai