Enable Javscript for better performance
ஒசூர் சானமாவு காட்டுக்கு திரும்பி வந்த 11 யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் ஒசூர் சானமாவு காட்டுக்கு திரும்பி வந்தன. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள சானமாவு காட்டில் கடந்த ஒரு மாதமாக 11 யானைகள் முகாமிட்டிருந்தன. அந்த யானைகளை வனத் துறையினர் போராடி தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு விரட்டுவதும், மீண்டும் அந்த யானைகள் சானமாவு காட்டுக்கு வருவதும் என தொடர்ந்து வந்தது.
    இந்த நிலையில், புதன்கிழமை 15 பேர் கொண்ட வனத் துறையினர் மற்றும் பொதுமக்கள் 11 யானைகளையும் பென்னிக்கல், சினிகிரிப்பள்ளி வழியாக தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு விரட்டினர்.
    இந் நிலையில், வியாழக்கிழமை அந்த 11 யானைகளும் மீண்டும் சானமாவு காட்டுக்கு திரும்பி வந்தன. இவை பீர்ஜேப்பள்ளி பகுதியில் உள்ள தக்காளி, நெல் தோட்டங்களைச் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
    இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு விரட்டி, அங்கிருந்து கர்நாடக வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai