Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் சீருடை பணியாளர் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் சீருடை பணியாளர் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

    By DIN  |   Published on : 09th February 2018 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீருடை பணியாளர் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
    இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்த வட்டத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பொது அறிவு புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளன.
    தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 6,140 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெற உள்ளது. இந்த போட்டித் தேர்வுக்கு, இந்த அலுவலகத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்பு பிப்.14-ஆம் தேதி தொடங்க உள்ளது.
    இந்த வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள், தேர்வுக்கான பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மேலும், மாதிரி போட்டித் தேர்வுகளும் நடத்தப்படும்.
    எனவே, இந்த பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள்,இரண்டாம் நிலை காவலர் பணியிடத்துக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதாரம், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அட்டை, மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பிப்.13-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்து தங்கள் பெயரை பதிவு செய்து பயன் பெறலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai