Enable Javscript for better performance
கெலமங்கலம் வனப் பகுதியில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    கெலமங்கலம் வனப் பகுதியில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெலமங்கலம் அருகே வனப் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் சடலம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ளது அய்யூர் காப்புக் காடு. இந்த பகுதியில் குச்சுவாடியில் இருந்து குடியூர் செல்லும் வனப் பகுதியில், சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் கிடந்தது தெரியவந்தது.
    தகவலின் பேரில் கெலமங்கலம் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சடலமாக கிடந்த பெண்ணுக்கு 25 வயதுக்குள் இருக்கலாம் எனவும், அவர் சுடிதார் அணிந்திருந்தார் எனவும், இறந்து 2 நாள்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா என கெலமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai