Enable Javscript for better performance
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 450 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 450 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 09th February 2018 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. மகேஷ்குமார் உத்தரவின் பேரில், 5 உள்கோட்டங்களில் உள்ள 31 காவல் நிலைய எல்லைப் பகுதியில் நாள்தோறும் போலீஸார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    அந்த வகையில், புதன்கிழமை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 28 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 203 பேர் மீதும், ஆவணங்கள், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 219 பேர் என மொத்தம் 450 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.42 ஆயிரம் அபராத தொகையாக வசூல் செய்தனர். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai