Enable Javscript for better performance
மல்லிக்கல் மலை காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    மல்லிக்கல் மலை காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 09th February 2018 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மல்லிக்கல் மலை காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு பதன்கிழமை நடைபெற்றது .
    போச்சம்பள்ளியில் இருந்து செல்லம்பட்டி செல்லும் வழியில் உள்ள அண்ணாமலைபுதூர் மல்லிக்கல் 150 அடி உயரமுள்ள மலை உச்சியில் 700 ஆண்டுகால பழமை வாய்ந்த கோயில் உள்ளது.
    இக் கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை அன்று கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம் அதே போல், பதன்கிழமை தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு அஷ்டலட்சுமி யாகம், குபேர யாகம், தனகார்சன் அதிருத்ரய யோகம் உள்பட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும், நடைபெற்றது. பின்னர் வேதபாராயணம், சிறப்பு உபசார பூஜைகளும், மங்களார்த்தியும் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதை தொடர்ந்து காலபைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
    இதில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று மலையை சுற்றி வலம் வந்து காலபைரவரை வழிபட்டனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai