Enable Javscript for better performance
லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்த 4 கொள்ளையர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்த 4 கொள்ளையர்கள் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்த கொள்ளையர்கள் 4 பேரை பொதுமக்கள் பிடித்து சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தொட்டி அருகே உள்ள எ.தின்னூரைச் சேர்ந்தவர் திம்மப்பா மகன் சாந்தகுமார் (22). இவர் உஸ்தனப்பள்ளியைச் சேர்ந்த அருண் என்பவருக்குச் சொந்தமான லாரியை ஓட்டி வருகிறார்.
    இந்த நிலையில், வியாழக்கிழமை ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு ஒசூர் நோக்கிச் சென்றார். காமன்தொட்டி அருகில் சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் லாரியை வழி மறித்ததாம். அந்த கும்பல் ஓட்டுநர் சாந்தகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியதாம். அதற்கு சாந்தகுமார், தான் இப்போது தான் சுமை ஏற்றிச் செல்வதாகவும், தன்னிடம் பணம் எதுவும் இல்லை எனவும் கூறினாராம்.
    ஆனால், அவர்கள் ஆத்திரமடைந்து சாந்தகுமார் சட்டைப் பையில் இருந்த ரூ.100-ஐ பறித்துக் கொண்டு, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சாந்தகுமாரின் தலையில் தாக்கினராம். இதில், பலத்த காயமேற்பட்டதில் அவர் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
    அதையடுத்து, தப்பி ஓட முயன்ற 4 பேர் கொண்ட கும்பலை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். பின்னர், அவர்கள் 4 பேரையும் கட்டி வைத்து, சூளகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    அதன் பேரில், அங்கு வந்த சூளகிரி காவல் ஆய்வாளர் சம்பத் மற்றும் போலீஸார் 4 பேரையும் சூளகிரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மத்திகிரியைச் சேர்ந்த உமரேஷ் (20), இர்பான் அலி (20), ஒசூரைச் சேர்ந்த ராகுல் குமார் (20), வித்யா சாகர் (20) என தெரியவந்தது.
    அதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai