Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டுப் போடும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டுப் போடும் போராட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை மூடி பூட்டுப் போடும் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
    ஒசூரில் அக் கட்சியின் கொடி ஏற்றும் விழாவில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    உச்சநீதிமன்றம் மார்ச் 30-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடைபெறும். அடுத்ததாக, மத்திய அரசுக்கு செலுத்தும் வரிகளைச் செலுத்தாமல் வரி கொடா இயக்கத்தை நடத்த வேண்டும்.
    ஜிஎஸ்டி, கலால் வரி உள்ளிட்ட மத்திய அரசுக்குச் செலுத்தும் அனைத்து வரிகளையும் தமிழகத்தில் செலுத்தக் கூடாது. மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், தமிழக அரசு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
    கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
    ஒசூரில் சாலை ஆக்கிரமிப்புகள் மற்றும் நடைபாதை கடைகளை அகற்றி, சாலையோரத்தில் நடைபாதை அமைத்து தர வேண்டும். ஒசூர் ராம்நகரில் உள்ள ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    ஒசூர் நகராட்சியில் உள்ள மீன் சந்தையை நகரின் வெளியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai