Enable Javscript for better performance
இடி தாக்கியதில் 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அஞ்செட்டி காவல் நிலையம் அருகே இடி தாக்கியதில்,  2 பேர் உயிரிழந்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் இருந்தது. பின்னர்,  மாலையில் சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.  
    இந்த நிலையில், அஞ்செட்டி அருகே உள்ள தாமசனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களான மாரியப்பன்,  நடராஜ் ஆகிய இருவரும் பணி முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 
    மழை அதிகமானதால், அஞ்செட்டி காவல் நிலையம் அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் இருவரும் நின்றனர். அப்போது, மிகப் பெரிய சத்தத்துடன் இடி தாக்கியதில்,  இருவரும் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தனர். 
    தகவலறிந்த அஞ்செட்டி போலீஸார் அங்கு சென்று இருவரின் சடலத்தை மீட்டு,  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai