Enable Javscript for better performance
கணவர் கொலை: மனைவி கைது- Dinamani

சுடச்சுட

    

    தேன்கனிக்கோட்டை அருகே கணவரை கொலை செய்ததாக,  மனைவியை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அளேநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சோமசேகர் (27).  இவரது மனைவி சாரதம்மா (22),  இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
    இந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டில் இருந்த சோமசேகர் கழுத்து பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக சாரதம்மா கூறினார். 
    இதுதொடர்பாக சோமசேகரின் அண்ணன் முனிராஜ் அளித்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை  போலீஸார் உடலை கைப்பற்றி,  பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அப்போது,  அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    இதையடுத்து,  சாரதம்மாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சோமசேகர் அடிக்கடி வெளியூர் செல்லும் நேரத்தில்,  அவரது நண்பர் பேட்டராயனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும்,  இது சோமசேகருக்குத் தெரிந்து கண்டித்ததால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும்  சாரதம்மா கூறியுள்ளார்.
    இதன்படி,  வியாழக்கிழமை  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சோமசேகரை அங்கு வந்த பேட்டராயன், அவரது நண்பர் அப்பையாவுடன் சேர்ந்து  சுடிதார் துப்பட்டாவால் இறுக்கிக் கொலை செய்ததாகவும்,  இருவரும் தப்பி சென்றவுடன்  சோமசேகர் மாரடைப்பில் இறந்ததாகக் கூறியதாகவும் சாரதம்மா கூறினார்.
    இதையடுத்து,  காவல் ஆய்வாளர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து, சாரதம்மாவை  கைது செய்தார். மற்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai