Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து உண்ணாவிரதம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் அறிவிப்ப- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து உண்ணாவிரதம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகநாதன் தெரிவித்தார்.
    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.கே.சரவணன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், துணைத் தலைவர்கள் மோகன், செல்வி, செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    முன்னதாக, மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தென்காசியில் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் மத்திய கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும். கூட்டுறவு சங்கத் தேர்தல் அலுவலர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்ந்தால் இரண்டாம்கட்ட கூட்டுறவு சஙகத் தேர்தலை நடத்துவதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்றார்.  
    அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தேர்தல்களில் உள்ள அரசியல் தலையீடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை விடுதி காவலர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இரவு காவலர்கள் ஆகிய பணியில் காணப்படும் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
    மாவட்ட புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், செயலர் மோகன், துணைத் தலைவர் பன்னீர்செல்வம், இணைச் செயலர்கள் பாரதி, கோவர்தனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai