Enable Javscript for better performance
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்- Dinamani

சுடச்சுட

    

    நாகரசம்பட்டியை அடுத்த புதூர் கிராமத்தில், தேவகுலத்தாரின் சித்தப்ப சுவாமி உற்சவ திருவிழாவையொட்டி, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர் .
    கடந்த 24-இல் சாமல்பட்டி கனிசி பெருமாளப்பனுக்கு கம்பத்தின்மேல் விளக்கேற்றுதல், பெரியமலை தீர்த்தம் பெரியசுவாமிக்கு கம்பத்தின் மேல் விளக்கேற்றுதல் ஆகியவை நடைபெற்றது. 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பால் அபிஷேகம், பூக்களால் பூஜை செய்தல், இரவு வான வேடிக்கையும், சேவை ஆட்டமும் நடைபெற்றது.  தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை கங்கை பூஜையும், பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    பின்னர் தலை பெயர் சூட்டுதல், தலைமுடி வாங்குதல், காலம் சென்ற பெரியவர்களை சுவாமிக்கு சேர்த்தல் ஆகிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai