Enable Javscript for better performance
நாளை 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்,ஓட்டுநர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாளை 108 ஆம்புலன்ஸ் உதவியாளர், ஓட்டுநர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் சனிக்கிழமை 108 ஆம்புலன்ஸ் உதவியாளர், ஓட்டுநர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
    இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட அதிகாரி ராமன் வெளியிட்டுள்ள செய்தி: 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெறுகிறது. மருத்துவ உதவியாளர் பணிக்கு உரிய கல்வித் தகுதியுடன் 20 முதல் 30 வரை வயது இருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ள ஆண்கள் தேர்வு செய்யப்படுவர். உயரம் 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். எனவே, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai