காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறப்பு

தமிழ்நாடு காவல் உதவி ஆய்வாளர் (விரல் ரேகை) பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு உதவும் வகையில், மையம் திறக்கப்பட்டுள்ளதாக

தமிழ்நாடு காவல் உதவி ஆய்வாளர் (விரல் ரேகை) பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு உதவும் வகையில், மையம் திறக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு காவல் துறையில் விரல் ரேகை பிரிவில் காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு 202 காலிப் பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்டோர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், w‌w‌w.‌t‌n‌u‌s‌r​b‌o‌n‌l‌i‌n‌e.‌o‌r‌g என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. 
இந்த மையமானது செப். 28-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 6 மணி வரையில் செயல்படும். எனவே, பதிவேற்றம் செய்ய சந்தேகம் இருந்தால் நேரிலோ அல்லது 04343-236746 என்ற  தொலைபேசி எண்ணிலோ, தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளர் எம். மாதேஷை 94457 97563 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். கணினி மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 28-ஆம் தேதி ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com