பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியர் மீது புகார்
By DIN | Published on : 15th September 2018 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வேப்பனஅள்ளி அருகே ஆபாச வீடியோ பதிவுகளைப் பதிவிட்டு தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சக ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கோபிநாதன் (40) பணியாற்றி வருகிறார். இவர், சக ஆசிரியர்களுக்கு ஆபாச வீடியோ பதிவுகளை பதிவிட்டுள்ளாராம். இதுகுறித்து ஏற்கெனவே, அவரை சக ஆசிரியர்கள் எச்சரித்தனராம்.
இத்தகைய நிலையில், மீண்டும் அவர் அத்தகைய பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டாராம். இதுகுறித்து குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலர் அருண் பிரகாஷ்ராஜ், வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட போலீஸார், ஆசிரியர் கோபிநாதனிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம், ஆசிரியர் கோபிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.