தமிழக அரசு விரைவில் கவிழும்: புகழேந்தி

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழக அரசு விரைவில் கவிழும் என்றார் கர்நாடக அமமுக செயலர் புகழேந்தி. ஒசூரில் எம்ஜிஆர் சந்தை பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழக அரசு விரைவில் கவிழும் என்றார் கர்நாடக அமமுக செயலர் புகழேந்தி.
ஒசூரில் எம்ஜிஆர் சந்தை பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அண்ணாவின் படத்துக்கு மரியாதை செலுத்திய புகழேந்தி, செய்தியாளர்களிடம் கூறியது:
பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது. எங்களது துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணைக்கேற்ப ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு வரும் ஆளுநர்கள் அனைவரும் பிரசனைகளை உருவாக்கி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் நல்ல முடிவை எடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசும் இதில் அக்கறை கொண்டு ஆளுநரை வற்புறுத்த வேண்டும்.
வரும் தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர் செல்வமும் எங்களை எதிர்த்து பிரசாரம் செய்தால் நாங்கள் ஜெயித்து விடுவோம். அவர்கள் எங்கேயும் வெளியில் செல்ல முடியாது; ஒட்டு கேட்க முடியாது. டிடிவி தினகரனிடம் உள்ளவர்கள் யாரும் வெளியே செல்ல மாட்டார்கள். நாங்கள் எதிர்பார்ப்பது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் மீதான நீதிமன்ற தீர்ப்பு. அதன்பிறகு இந்த ஆட்சி கவிழும் என்றார்.
அமமுக மாவட்டச் செயலாளர் மாதேவா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com