மது விற்பனை செய்த 5 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 01st April 2019 10:18 AM | Last Updated : 01st April 2019 10:18 AM | அ+அ அ- |

மத்தூரில் அனுமதியின்றி மது பதுக்கி விற்பனை செய்த 5 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மத்தூரில் அரசு அனுமதியின்றி மது பதுக்கி விற்பனை செய்வதாக மத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மத்தூர் போலீஸார் ரோந்தில் ஈடுபட்ட போது, உணவகம் ஒன்றில் இருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து மாதம்பதியைச் சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன்(38), மத்தூர் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் மகன் சிவா (33), சிவாஜி மகன் ராஜீவ்காந்தி (31), நரசிம்மன் மகன் கலையரசன் (33), பொன்னுசாமி மகன் ராஜா (50) ஆகிய 5 பேரின் மீது மத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.