உலக ஆட்டிசம் தினம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக ஆட்டிசம் தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக ஆட்டிசம் தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் உலக ஆட்டிசம் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கட்டிகானப்பள்ளி புதூரில் மாற்றுத் திறனாளிகள் பள்ளி ஆயத்த மையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமை வகித்தார். ஆட்டிசம் என்பது குழந்தைகளின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு ஆகும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 20 லட்சம் பேர், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறந்த குழந்தை 6 மாதங்கள் கடந்தும் தாயின் முகத்தை கண்டு சிரிக்காமல் இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்கள் கடந்தும் மழலை மொழி பேசாமல் இருத்தல், ஒரே இடத்தில் அமர்ந்து இருத்தல் உள்ளிட்டவைகள் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.  இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உறைவிடம், பாதுகாப்பு, முறையான கவனிப்பு, மரியாதை, உரிய சிகிச்சை கிடைக்க பாடுபடுவோம் என இந்த நிகழ்வில் பங்கேற்றோர் உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், கணேசன், தலைமையாசிரியர் கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com