உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்

உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.  கிருஷ்ணகிரி மக்களவைத்  தொகுதியில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்தால்,


உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.  கிருஷ்ணகிரி மக்களவைத்  தொகுதியில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்தால்,  இத் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரியை அவர் பெற்றுத் தருவார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து, பிரசாரப் பொதுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசியது: 
உயர் கல்வி,  சாலை வசதி,  மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.  தரமான சாலை வசதிகள் உள்ளதால்,  தொழில் முதலீட்டாளர்கள், தொழில் தொடங்க ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர்.   2011-ஆம் ஆண்டு, அதிமுக அட்சிக்கு வந்தபோது, 100-க்கு 21 பேர் உயர் கல்வி கற்கும் நிலை இருந்தது.  அது, இப்போது, 46.8 ஆக உயர்ந்துள்ளது.  முன்னாள் முதல்வர், கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கி,  மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரிகளை தமிழகத்துக்குக் கொண்டு வந்தார். அரசின் சாதனைகள் குறித்து, மு.க.ஸ்டாலினுக்குத் தெரியவில்லை.  சட்டம், ஒழுங்கு சரியில்லை என்கிறார்.  இந்தியாவிலேயேதான் சட்டம் - ஒழுங்கு பேணிக் காக்கப்படுகிறது.  ராகுல் காந்தியை மு.க.ஸ்டாலின் மட்டுமே பிரதமர் வேட்பாளர் என அறிவித்துள்ளார்.  அவர்களின் கூட்டணியில் உள்ள கட்சிகள், ராகுலை பிரதமராக ஏற்க மறுக்கிறார்கள். 
ஸ்டாலினுக்கு நல்ல எண்ணம் இருந்தால், அவரை பதவிகள் தேடி வரும்.   பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்கிறார் ஸ்டாலின்.  அவர் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். 
மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த விவகாரத்தில், தவறான தகவல்களை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார்.   சர்தார் வல்லபாய் படேல் சாலையில் கருணாநிதிக்கு ரூ.300 கோடி மதிப்பில் நிலம் தர முன்வந்தபோது, அதை ஏற்காமல் நீதிமன்றம் சென்றவர் ஸ்டாலின்.  பொய்யான தகவல்களை மக்களிடம் கூறி அனுதாபத்தைப் பெற ஸ்டாலின் முயற்சி செய்கிறார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி.முனுசாமியை வெற்றிபெறச் செய்தால்,  அவர், மத்திய அரசிடம் போராடி, கிருஷ்ணகிரிக்கு அரசு மருத்துவக் கல்லூரியைப் பெற்றுத் தருவார் என்றார்.   இந்தக் கூட்டத்தில் கே.அசோக்குமார் எம்.பி,  எம்எல்ஏ-க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினர், ஆளும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com