சுடச்சுட

  

  பா.ம.க. பிரமுகர் அக்கட்சியிலிருந்து விலகி டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 
  போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கனல் சிவா (எ) சிவகுமார், பா.ம.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தார். தற்போது அ.ம.மு.க.வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து, முன்னாள் அமைச்சரும், தலைமை நிலையச் செயலாளருமான  பழனியப்பன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார், துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில்   அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai