சுடச்சுட

  

  ஒசூர் தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அ.ம.மு.க. வேட்பாளர் புகழேந்தி

  By DIN  |   Published on : 16th April 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒசூர் தொகுதியில் வெற்றிபெற்றால் செய்ய இருக்கும் பணிகள் குறித்த தேர்தல் அறிக்கையை அ.ம.மு.க.வேட்பாளர் புகழேந்தி வெளியிட்டார்.
  இதையடுத்து அவர் கூறியது:
   ஒசூர் தொழிலாளர்கள் நிறைந்த நகரமாக உள்ளது. இத்தொகுதியில் வாக்குக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது. அதைத் தொழிலாளர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர். இந்தச் செயலை நான் பாராட்டுகிறேன். இது ஒசூர் மக்கள் தந்திருக்கும் பாடம். இது தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். ஆட்சியில் செய்த வளர்ச்சித் திட்டப் பணிகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்க முடியாமல், மத்தியில் பிரதமராக மோடி  வர வேண்டும் எனக் கூறி வாக்குச் சேகரித்து வருகின்றனர் என்றார். அப்போது, முன்னாள் கவுன்சிலர் மரேகவுடா, நகரச் செயலாளர் ஜெயச்சந்திரன்,   ஜான் திமோதி உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai