சுடச்சுட

  

  செல்லகுமாருக்கு ஆதரவாக கர்நாடக முன்னாள் அமைச்சர் வாக்குச் சேகரிப்பு

  By DIN  |   Published on : 16th April 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அ.செல்லகுமாரை ஆதரித்து, கர்நாடக முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டி  தளி தொகுதியில் வாக்குச் சேகரித்தார்.
  கர்நாடக மாநில எல்லையில் இப்பகுதி அமைந்துள்ளதால், இங்குள்ள மக்கள் கல்வி, பணிகளுக்கு  அம் மாநிலத்துக்கு சென்று வருகின்றனர். இந்தப் பகுதிகள் மக்கள் கன்னடம் மொழி பேசுவோர் என்பதால், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ராமலிங்கரெட்டி தளி தொகுதியில் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தார். அவருடன் காங்கிரஸ்  வேட்பாளர் ஏ.செல்லக்குமார், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், ஆகியோர் வாக்குச்
  சேகரித்தனர்.
  ஒசூர் வந்த முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டியை காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ரெட்டி வரவேற்றார். அப்போது ஒசூர் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ.சத்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டி பேசுகையில், இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசி வருகிறது. 
  பண மதிப்பிழப்பு நடவடிக்கை  சர்வாதிகார நடவடிக்கை. ஜி.எஸ்.டி.வரியால் வியாபாரிகள், சிறு தொழில் முனைவோர், வணிகர்கள் என அனைத்துத் தரப்பு மக்கள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர் என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai