சுடச்சுட

  


  ஒசூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜோதி இறுதிக் கட்டப் பிரசாரத்தின் போது,  அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி ஒசூர் பகுதியில் வாக்குகள் சேகரித்தார்.   
  ஒசூர் நகராட்சிக்கு உள்பட்ட ,  அரசனெட்டி  சூர்யா நகர், பாரதி நகர்,  ஒசூர் ராஜ கணபதி நகர், மூக்கண்டப்பள்ளி   உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன்  வீடு வீடாகச் சென்று முதல்வரின் சாதனைகள் மற்றும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஒசூருக்கு கொண்டுவந்த நலத் திட்டங்கள் குறித்து  விளக்கி  துண்டுப் பிரசுரங்களை வழங்கி  வாக்குகள் சேகரித்தார்.
  இதில் ஒசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் அசோக் ரெட்டி, விஜய் நாராயணரெட்டி,  பி.ஆர். வாசுதேவன் தனுஷ்கோடி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.  பின்னர் பாகலூர்,  பேரிகை  உள்ளிட்ட கிராமங்களில் வேட்பாளர் ஜோதி  வாக்குச் சேகரித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai