சுடச்சுட

  


  கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் வாக்குப் பதிவை அமைதியாக நடத்தும் வகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோருக்கு  பணி ஒதுக்கீடு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் முன்னிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல்,  ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு, ஏப்.18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு, தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 1,850 வாக்குச் சாவடிகளில் காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவப் படையினர், ஊர்க்காவல் படையினர் என 3,550 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான பணி ஒதுக்கீடு  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் முன்னிலையில் நடைபெற்றது.   
  மேலும், வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வதற்காக 307 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai