சுடச்சுட

  

  முருக்கம்பள்ளம்  ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத மகோற்சவம்

  By DIN  |   Published on : 17th April 2019 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  முருக்கம்பள்ளத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் 45 - ஆம் ஆண்டு மகாபாரத மகோற்சவ விழா,  கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
  கிருஷ்ணகிரி மாவட்டம்,  முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் 45-ஆம் ஆண்டு மகாபாரத மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.  இதையடுத்து  தினசரி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையில் 18 நாள்கள்,  மகாபாரத சொற்பொழிவும்,  ஏப்.19-ஆம் தேதி முதல் தொடர்ந்து 13 நாள்கள் இரவு 9 மணியளவில் மகாபாரத தெருக்கூத்து நாடகமும் நடைபெறுகிறது. 
  இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முருக்கம்பள்ளம்,  பாலேப்பள்ளி,  எலத்தகிரி, காத்தாடிகுப்பம்,  வெண்ணம்பள்ளி,  ஜோடுகொத்தூர்,  மேல் அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தினர் ஒருங்கிணைக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai