கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,850 வாக்குச் சாவடி மையங்கள் தயார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,850 வாக்குச் சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,850 வாக்குச் சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்.18-ஆம் தேதி நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில்  ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூர், தளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுகிகள் உள்ளன.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 614 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 53 ஆயிரத்து 498 பெண் வாக்காளர்களும், 236 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 26 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,850 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வனத் துறையினர், வருவாய்த் துறையினர் என பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 9,840 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், காவல் ஆய்வாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க் காவல் படையினர், துணை ராணுவத்தினர் என மொத்தம் 3,317 பேர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் 817 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெத்தமூகிலாளம் போன்ற மலைக் கிராம வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தால் தனி வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, இரட்டை இலை சின்னத்திலும், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் அ. செல்லகுமார், கை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த என். மதுசூதனன், விவசாயிகள் சின்னத்திலும் மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் டார்ச் லைட் சின்னத்திலும், சுயேச்சையாக அமமுக சார்பில் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் எஸ்.கணேச குமார் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 285 வாக்குச் சாவடி மையங்கள் பதட்டமானவையாகவும், அதில் 6 மிகவும் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com