மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு

மக்களவைத் தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தல், ஒசூர் சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.18-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலையொட்டி, மாவட்டக் காவல் துறையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிரடிப் படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
தேர்தலின்போது, அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணியாளர்களை  மூன்றாக பிரித்து வேறு மாவட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் அதிரடிப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதட்டமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸார் மற்றும் அதிரடிப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மது விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குச் சாவடிகளில் நூறு மீட்டருக்குள் எந்தவித வாகனமும் அனுமதிக்கப்பட மாட்டாது. அரசியல் கட்சியினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரச்னைக்குரிய சுமார் 306 நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநிலங்களின் எல்லையோர சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைச் சாவடிகளில் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும். அனைத்து சோதனை சாவடிகளும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதட்டமான வாக்குச் சாவடிகள், சிசிடிவி கேமரா மூலம் சென்னையிலிருந்து நேரடியாக  கண்காணிக்கப்பட்டு வருகிறது என அதில் அவர் 
தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com