சீலக அள்ளி ஸ்ரீஅண்ணாமலையார் குலதெய்வ விழா
By DIN | Published On : 27th April 2019 05:11 AM | Last Updated : 27th April 2019 05:11 AM | அ+அ அ- |

சீலகஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅண்ணாமலை குலதெய்வ பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சிகலஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅண்ணாமலையார் குலதெய்வ பெருவிழா, ஏப். 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனையும், பால் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, மகா தீபம் ஏற்றுதல், அர்ச்சுணன் தபசு நாடகம், வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இந்த விழாவில், சீகலஅள்ளி, தேவீரஅள்ளி, ஏர்ரசீகலஅள்ளி, பெரியகாமாட்சிபட்டி, சின்னபனமுட்லு, முள்ளனூர், அஞ்சூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.