முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
அரசு மருத்துவமனையில்கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
By DIN | Published On : 04th August 2019 05:10 AM | Last Updated : 04th August 2019 05:10 AM | அ+அ அ- |

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு மற்றும் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி தலைமை தாங்கினார். இதில் கர்ப்பிணிகளுக்கு புடவைகள், வளையல்கள், மங்களப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் தீபா, மகப்பேறு பிரிவு செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.