முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
ஆடிப்பூர திருவிழா: பால்குட ஊர்வலம்
By DIN | Published On : 04th August 2019 05:10 AM | Last Updated : 04th August 2019 05:10 AM | அ+அ அ- |

ஆடிப்பூர திருவிழாவையொட்டி,கிருஷ்ணகிரியில் பால் குட ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் சமேத அன்னை ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் 18-ஆம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கோ-பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, அம்மனுக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் நிகழ்வு நடைபெற்றது. நரசிம்மசாமி கோயில் தெருவாக வந்த நகர்வலம், நேதாஜி சாலை, காந்தி சாலை, தர்மராஜா கோயில் தெரு, மோகன் ராவ் காலனி வழியாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்தது.