சிராவண முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஒசூர், சூளகிரி பகுதியில் முதலாவது சிராவண சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு, சிராவண

ஒசூர், சூளகிரி பகுதியில் முதலாவது சிராவண சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு, சிராவண மாதம் (தெலுங்கு, கன்னட புரட்டாசி மாதம்) முதல் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெரும்பாலான தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் விரதம் மேற்கொண்டு பெருமாள் கோயில்களுக்கு சென்று சுவாமியை வழிபடுவது வழக்கம்.  
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மற்றும் சூளகிரி பகுதியில் முதலாவது சிராவண சனிக்கிழமையை முன்னிட்டு விரதம் இருந்து பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். இதையொட்டி, ஒசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள லட்சுமி வெங்கட்ரமண சுவாமி கோயில், கோபசந்திரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில், சூளகிரி பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில் , பஸ்தலபள்ளி திம்மராய சுவாமி மற்றும் பாகலூர் அருகே குடிசெட்லு கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி திருக்கோயில்  உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த கோயில்களில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், இக்கோயில்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒசூர் மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்தும், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com