சுற்றுலாப் பயணிகளின் வருகையால் திணறியது ஒகேனக்கல்!

ஒகேனக்கல் ஆடிப் பெருக்கு விழாவின் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின்

ஒகேனக்கல் ஆடிப் பெருக்கு விழாவின் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததால், ஒகேனக்கல்லுக்குச் செல்லும் அனைத்து சாலை
களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிறப்பு வாய்ந்த ஆடிப் பெருக்கு விழா ஆண்டுதோறும் ஒகேனக்கல்லில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை தொடங்கிய ஆடிப் பெருக்கு விழாவையொட்டி நாள்தோறும் ஒகேனக்கல்லில் அரசு துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பெங்களூரு, ஆந்திரம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் எண்ணெய் தேய்த்து குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலாத் துறை சார்பில் பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் நிறுத்த இடமில்லாததால் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டன. இதைத்தவிர அரசுப் போக்கு
வரத்துத் துறை சார்பில் பென்னாகரம், அஞ்செட்டி, தருமபுரி பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில் கூட்ட நெரிசல் அதிகரித்திருந்தன. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளும் அதிகரித்திருந்தன. மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். பிரதான அருவி,ஊட்டமலை மற்றும் ஆலாம்பாடி பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீர்வரத்து குறைந்தது: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையளவு குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல் பிலிகுண்டுலுவுக்கு வந்து கொண்டிருந்தது. இது படிப்படியாக குறைந்து ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு  4,500 கன அடியாக உள்ளது. எனினும், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கான தடை 13-ஆவது நாளாக நீடிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com