கெலவரப்பள்ளி அணை பகுதியிலிருந்து யானைகளை விரட்டும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் முகாமிட்டுள்ள இரு யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் முகாமிட்டுள்ள இரு யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
 ஒசூர் அருகே பேரண்டபள்ளி வனப் பகுதியில் பதுங்கியிருந்த இரு யானைகள், கடந்த சில நாள்களுக்கு முன்பு கெலவரப்பள்ளி அணைப் பகுதிக்கு இடம்பெயர்ந்தன. யானைகளின் நடமாட்டத்தினால், அணையைச் சுற்றியுள்ள கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி, சித்தனபள்ளி, நந்திமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் கெலவரப்பள்ளி அணையில் திங்கள்கிழமை குளியலிட்ட இரு யானைகளும், திடீரென அப் பகுதியில் நின்றிருந்த வனத்துறையினரை விரட்டின.
 இதனால் அச்சமடைந்த வனத் துறையினர் உயிருக்குப் பயந்து அங்கிருந்து தப்பியோடினர். ஆனால், அந்த இரு யானைகளும் யாரையும் தாக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த யானைகள், அணை அருகேயுள்ள தைலத்தோப்பில் சென்று பதுங்கின.
 இந்த யானைகளின் நடமாட்டத்தை, 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனிடையே பகல் நேரத்தில் யானைகளை அங்கிருந்து விரட்டுவதில் சிரமம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 மேலும் இரு யானைகளில், கோணக்கொம்பு என்ற யானை முரட்டுத்தனமாகக் காணப்படுவதால் அதனை கும்கி யானையை வரவழைத்து விரட்டுவது அல்லது இரு யானைகளுக்கும் மயக்க ஊசி செலுத்தி கெலவரப்பள்ளி அணைப் பகுதியிலிருந்து வெளிக்கொணருவது என்ற இரு திட்டங்களை உயர் அதிகாரிகளின் பரிந்துரைக்கு அனுப்பியிருப்பதாக, வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 இதனிடையே திங்கள்கிழமை பெங்களூரிலிருந்து மயக்க ஊசி செலுத்தும் நிபுணர் கெலவரப்பள்ளி அணைப் பகுதிக்கு நேரில் சென்று யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்துவதற்கான சாத்தியமுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com