சுடச்சுட

  

  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
  ஊத்தங்கரை வட்டார கிளை தொடக்க விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா, ஓய்வுபெற்ற மற்றும் இயக்கம் முன்னோடிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஒன்றியத் தலைவர் செ.ராஜகுமார் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கே. பி.ரக்ஷித்,  மாநில துணை பொதுச் செயலாளர் சோ.பொன் நாகேஷ், முன்னாள் மாநிலத் தலைவர்கள் சேலம் கணேஷ் சங்கர், கோவை வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  முன்னதாக ஒன்றியச் செயலாளர் மா.கலைச்செல்வன் வரவேற்றார். மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் மேலவை உறுப்பினர் செ.முத்துசாமி கிளையை தொடக்கிவைத்து பேசினார். விழாவில்  ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் நிறுவனர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அமைச்சர் வ.முல்லைவேந்தன் வழங்கி சிறப்பித்தார். 
  இதில் அனைத்து மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  ஒன்றிய பொருளாளர் சிவகணேசன் நன்றி கூறினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai