சுடச்சுட

  

  சென்னம்மாள் கோயில் திருவிழா: கொதிக்கும் எண்ணெயில் கையினால் அதிரசம் சுட்ட பக்தர்கள்

  By DIN  |   Published on : 14th August 2019 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் சென்னம்மாள் கோயிலில் தேர்த் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கையினால் அதிரசம் சுட்டு எடுக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).
   இந்தக் கோயிலின் 15ஆம் ஆண்டு தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, கலச கும்ப பூஜை, அம்மனுக்கு அபிஷேகம், காவடியாட்டம், தேர் திருவீதியுலா, தெருக்கூத்து போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
   திருவிழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, ஹோம குண்ட பூஜை, சங்கு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் பூசாரி காளியப்பன் கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு, அதிரசத்தை எடுத்து படையலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். மேலும், பக்தர்களும் கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அதிரசத்தை சுட்டு அம்மனுக்கு படையலிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai