சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம்  பென்னாகரம் பகுதியில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று  வருகின்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களில் 8 பேர் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில்
  பதிவிட்டுள்ளனர்.
  இந்த வீடியோவானது  சமூக வலைத் தளங்களில்  வேகமாகப் பரவி  வந்தது. இந் நிலையில், பள்ளி தலைமை (பொ) தமிழ்வேல், பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், பென்னாகரம் போலீஸார், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட 8 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு, விசாரணை  நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai