காஷ்மீர் பிரச்னை சர்வதேச பிரச்னையாகிவிட்டது: வைகோ

காஷ்மீர் பிரச்னை சர்வதேச பிரச்னையாகி விட்டது. காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, குளவிக் கூட்டில்

காஷ்மீர் பிரச்னை சர்வதேச பிரச்னையாகி விட்டது. காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, குளவிக் கூட்டில் வைத்த கையைப் போன்றது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியில் உயிரிழந்த மதிமுக கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் டி.ஜி. மாதையன், தருமபுரி மாவட்ட முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே. தேவராஜன், கட்சியின் மூத்த முன்னோடி ஆர்.எஸ். கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணைச் செயலாளர் சாதிக் பாஷா ஆகியோரின் உருவப் படங்கள் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
அறிஞர் அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாள் விழாவில், மதிமுக மாநாடு, சென்னை ராயப்பேட்டை வி.எம்.சி. மைதானத்தில் செப்.15-ஆம் தேதி தொடங்குகிறது.  மாநாட்டை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மலேசிய நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும், பினாங் மாநிலத் துணை  முதல்வருமான ராமசாமி உரை நிகழ்த்துகிறார். மேலும், காஷ்மீரிலிருந்து பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளோம். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி தொடர்ந்து போராடி வருகிறேன்.  வரும் பொதுத் தேர்தலுக்கு பிறகு, திமுகதான் ஆட்சிக்கு வரும். அதிமுக ஆட்சியில் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பிரதமரிடம் நேரடியாக மனு அளித்திருக்கிறேன். உச்ச நீதிமன்றத்திலும் தடை வாங்கியுள்ளேன். 
மத்திய அரசு, காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, குளவிக் கூட்டுக்குள் கைவைத்ததுபோல் ஆகிவிட்டது. காஷ்மீர் பிரச்னை சர்வதேச பிரச்னையாகி விட்டது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com