ஒசூரில் ஆணழகன் போட்டி

 ஒசூரில்  மாநில அளவிலான ஆணழகன் போட்டியை  இந்திய ஆணழகன் சங்கம்,  தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம்,  கிருஷ்ணகிரி மாவட்ட


 ஒசூரில்  மாநில அளவிலான ஆணழகன் போட்டியை  இந்திய ஆணழகன் சங்கம்,  தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம்,  கிருஷ்ணகிரி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின.  
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியார் உடற்பயிற்சி நிலையம் சார்பாக  மாஸ்டர் கோபால் 18ஆவது மிஸ்டர் ஜெகநாதன் நினைவு கோப்பை 2019 மாநில அளவிலான மிஸ்டர்  தமிழ்நாடு ஆணழகன் போட்டியை  நடத்தினர். இந்தப் போட்டியில்  இப் போட்டி 55,  60,  65,  70,  75,  80,  85,  +85  கிலோ ஆகிய 8 எடைப் பிரிவுகள் மற்றும்  மென் பிஸிக் போட்டியில் ஒரு பிரிவும் நடைபெற்றன. இந்த போட்டியில் சேம்பியன் ஆப் சேம்பியன் வின்னர் பட்டத்தை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன், சேம்பியன் ஆப் சேம்பியன் ரன்னர் பட்டத்தை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சரத்,  மோஸ்ட் மஸ்குலர் மேன்  பட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த உத்தரேஸ் ஆகியோர் பெற்றனர். 
நாமக்கல் மாவட்டச் சேர்ந்த சரவணன் அடுத்தமாதம் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள மிஸ்டர் ஆசியா போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   
அவருக்கு ஒசூர் பகுதி வாழ் மக்களின் சார்பாக குறிப்பாக கோபால் ரூ.1.5 லட்சம் வழங்கி ஆணழகன் ஆசியப் போட்டிக்கு செல்வதற்கான ஊக்கத் தொகையாக வழங்க ஆவன செய்தார். நடுவர்களாக தேசிய நடுவர்கள் அரசு,  போஸ்,  மயில்சாமி, சரவணன், பாஸ்கர், பாலமுருகன், ராஜேஷ், முகில் ஆகியோர் செயல்பட்டனர்.  சிறப்பு விருந்தினராக மிஸ்டர் வோல்டு ராஜேந்திரன் மணி கலந்து கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com