கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 ஏரிகள் புனரமைக்கப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் 10 ஏரிகள் என மொத்தம் 100 ஏரிகள் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் இயக்குநர் லட்சுமிபதி தெரிவித்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் 10 ஏரிகள் என மொத்தம் 100 ஏரிகள் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் இயக்குநர் லட்சுமிபதி தெரிவித்தார். 
கிருஷ்ணகிரி, சூளகிரி, கெலமங்களம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அகசிப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, சூளகிரி ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் இயக்குநர் லட்சுமிபதி, மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம் மற்றும் குட்டைகள் ஆகியவற்றை புனரமைக்கும் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியத்துக்கு தலா 10 ஏரிகள் வீதம் 100 ஏரிகள் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 325 குளம், குட்டைகள் தலா ரூ.ஒரு லட்சம் வீதம் புனரமைப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் நீர்வரத்து கால்வாய், நீர் வெளியேற்றும் கால்வாய் ஆகியவற்றை தூர்வாருவது, மதகுகள் புதுப்பிக்கப்படுகிறது. மேலும், அகசிப்பள்ளி, சூளகிரி பகுதிகளில் ஏரிகள், குளம், குட்டைகள் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஹரிஹரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பிரசன்ன வெங்கடேசன், சரவணபவா, விமல் ரவிக்குமார், ராமச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com