ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கியப் பேரவை அருந்தமிழ் விழா

ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில்  ஐந்தாம் ஆண்டு அருந்தமிழ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில்  ஐந்தாம் ஆண்டு அருந்தமிழ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அதியமான் மகளிர் கல்லூரி செயலர் ஷோபா திருமால்முருகன் தலைமை வகித்தார். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் த.பரிமளம் முருகன், வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் மேலாளர் கு.அமுதா ஆறுமுகம், சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரமம் உயிரித் தொழில்நுட்ப விரிவுரையாளர் செளமியா மதன்குமார், வித்யா மந்திர் இளங்கலை ஆசிரியர் ஜே.உஷாசெல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் தொடக்கிவைத்தார்.  கலைமாமணி வேல்முருகன் குழுவினரின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு வித்யா மந்திர் கல்லூரி முதல்வர் க.அருள் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் பரிசுகளை வழங்கி  பேசினார்.
தனி உரை நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் எ.செல்லகுமார் தலைமை வகித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், விடியலின் விலாசம் என்ற தலைப்பில் பேசினார். பிற்பகல் தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முத்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
நக்கீரன் இதழாசிரியர் கோபால் விருது வழங்கினார்.  திரைப்பட பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி விருதை பெற்று ஏற்புரையாற்றினார். 
மாலை 4.30 மணிக்கு தனியுரை நிகழ்ச்சிக்கு அண்ணா அறிவகம் கல்வி குழுமத்தின் நிறுவனர் சையது தலைமை வகித்தார். இயக்குநர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கண்ணீர் விட்டு வளர்த்தோம் என்னும் தலைப்பில் தனி உரையாற்றினார்.
மாலை 6 மணிக்கு நகைச்சுவை பாட்டு மன்றம் நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்தார். நடுவராக ஆடுதுறை அழகு பன்னீர் செல்வம் அவர்கள் தலைமையில் நகைச்சுவை பாட்டு மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் வே.சந்திரசேகரன், செயலாளர் சீனி.திருமால் முருகன், பொருளாளர் க.அருள், புரவளர்கள் , உப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com