ஒகேனக்கல்லில் அருவி பாதையில் பதுங்கியிருந்த முதலை மீட்பு

ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் பாதையில் பதுங்கியிருந்த முதலையை வனத் துறையினர் மீட்டு, முதலைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.

ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் பாதையில் பதுங்கியிருந்த முதலையை வனத் துறையினர் மீட்டு, முதலைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.
கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால், ஆற்றிலிருந்த முதலைகள் கரையோரப் பகுதிகளுக்கு வருகின்றன. இந்த நிலையில், பிரதான அருவிக்கு செல்லும் பாதையில் ஞாயிற்றுக்கிழமை  பதுங்கியிருந்த 3 மீட்டர் நீளமும், 40 கிலோ எடை கொண்ட பெண் முதலையை வனத் துறை அலுவலர் கேசவன் தலைமையில் முதலை மீட்பு குழுவினர் சிவா, மாதேஸ், சத்தியமூர்த்தி ஆகியோர் பிடித்து முதலை மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com