கிருஷ்ணகிரியில் தமிழக உழவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இருகூர் - தேவன்குந்திக்கு இடையே கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாரத பெட்ரோலிய நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தக் கோரி, தமிழக உழவர் முன்னணியினர்

இருகூர் - தேவன்குந்திக்கு இடையே கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாரத பெட்ரோலிய நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தக் கோரி, தமிழக உழவர் முன்னணியினர் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தூருவாசன் தலைமை வகித்தார். ஆலோசகர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருகூர் - தேவனகுந்தி குழாய் பதிப்புத் திட்டத்துக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒடையாண்டஅள்ளி, எச்சனஅள்ளி, எதிர்கோட்டை, ராயக்கோட்டை, பழையூர், நெல்லூர், சஜ்ஜலப்பட்டி, பிள்ளாரி அக்ரஹாரம், கொப்பக்கரை, கோனேரி அக்ரஹாரம், லிங்கனப்பட்டி, கருக்கம்பட்டி, நடுக்காலப்பட்டி, கடவரஅள்ளி, சின்னபண்டப்பட்டி, அயானப்பள்ளி, பந்தாரப்பட்டி, பண்டப்பள்ளி, ஆழ்மரத்துக் கொட்டாய், கொடக்காரஅள்ளி, சீபம், உள்ளட்டி, துப்புகானப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வழியாக பாரத பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பெட்ரோல் கொண்டு செல்ல குழாய் பதிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 ஏற்கெனவே இந்த பகுதிகளில் கெயில் நிறுவனம் குழாய்கள் பதித்துள்ளன. மேலும் தருமபுரி - ஒசூர் இடையே ராயக்கோட்டை வழியாக 6 வழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் குழாய்கள் பதிக்கப்பட்டால், விவசாயிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
 தமிழ்நாட்டில் விளை நிலங்களில் இந்த பணிகளை கைவிட்டு கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சாலையோரமாக நிறைவேற்றப்படுவதை போல அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com