Enable Javscript for better performance
தேன்கனிக்கோட்டையில் மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேன்கனிக்கோட்டையில் மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கி வைப்பு

    By DIN  |   Published on : 24th August 2019 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலை இருபுறங்களிலும் ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார். 
    மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளான மழைநீர் சேமிப்புக் குழி, வறண்ட ஆழ்துளைக் கிணறு பகுதியில் நீர் சேகரிப்பு அமைப்பு, 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்புக் குழி, 5 இடங்களில் 47 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேமிப்பு பெரிய தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர்
    பார்வையிட்டார்.
    மேலும், பள்ளிக் கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து வரக்கூடிய மழை நீரை ஆங்காங்கே குழாய் மூலமாக மழை நீர் சேகரிப்பு தொட்டிகளுக்கு நீர் செல்லும் அமைப்புகளையும், பள்ளிக் குழந்தைகள் நாள்தோறும் பயன்படுத்தும் நீரை தனியாக தொட்டி அமைத்து மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு உதவும் நீரையும், வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான நீர் சேமிப்பு கட்டமைப்புகளையும் பார்வையிட்டு மரக் கன்றுகளை நட்டு வைத்தார்.
    முன்னதாக, நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மத்திகிரி கால்நடை பண்ணை அருகே தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலை பகுதியில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனம் பங்களிப்புடன் சுமார் ஆயிரம் நாட்டு வகை மரக் கன்றுகள் நடவு செய்யும் பணியை ஆட்சியர் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் செந்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் நந்தகுமார், இயற்கை ஆர்வலர்கள் தாமஸ், லட்சுமணன் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai