ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதியத்தில் நியமிப்பதை கைவிட வலியுறுத்தல்

பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் நியமிப்பதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் நியமிப்பதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில பொதுச் செயலர் மோகனரங்கன், மாவட்டத் தலைவர்கள் மூர்த்தி, பாலசுப்பிரமணியன், செயலர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் கிராமங்களில் தங்கி பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், அவர்களுக்கு குடியிருப்புகளுடன் கூடிய அலுவலகத்தை கட்டித் தர வேண்டும். அதுவரை அந்த விதிமுறையில் தளர்வு அளிக்க வேண்டும். பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவைப் பயிற்சி மற்றும் நிர்வாக பயிற்சி அளிக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களின் பணிவரன் முறை, தகுதிக்காண பருவம் செய்து உத்தரவு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com