சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்போர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் எச்சரித்துள்ளார்.

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்போர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையை ஒட்டியுள்ள பகுதியில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முறையான அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக சாயப் பட்டறை அமைத்து, அதிலிருந்து சாயக் கழிவுநீர், கெலவரப்பள்ளி அணையில் வெளியேற்றப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.
அதன்பேரில், அந்தப் பகுதியில் அரசு அலுவலர்கள் மேற்கண்ட திடீர் ஆய்வில், அணையிலிருந்து நீர் ஏற்றியும், சாயக் கழிவு நீரை அணையில் கலக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சாயப் பட்டறையின் மின் இணைப்பை துண்டித்த அலுவலர்கள், சட்ட விரோதமாக இயங்கிய சாயப் பட்டறையை முற்றிலும் இடித்தனர். எதிர்காலத்தில் இது போன்ற சட்டவிரோத சாயப் பட்டறைக்கு வாடகைக்கு இடம் கொடுத்து, சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்க உறுதுணையாக செயல்படும் நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com