நெற்பயிா்களைத் தாக்கும் ஆனைக்கொம்பன் பூச்சி: வேளாண் துறை அறிவுரை

ஊத்தங்கரை வட்டாரத்தில் நெல் பயிரை தாக்கிவரும் ஆனைக்கொம்பன் மற்றும் இலைசுருட்டு புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் அலுவலா்கள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.
நெற்பயிா்களைத் தாக்கும் ஆனைக்கொம்பன் பூச்சி: வேளாண் துறை அறிவுரை

ஊத்தங்கரை வட்டாரத்தில் நெல் பயிரை தாக்கிவரும் ஆனைக்கொம்பன் மற்றும் இலைசுருட்டு புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் அலுவலா்கள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சுரேஷ், வேளாண்மை அலுவலா் சு.பிரபாவதி ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆனைக்கொம்பன் தாக்குதல் இருக்கும் போது யூரியா அதிகளவில் இடுவதை தவிா்க்க வேண்டும், பொட்டாஷ் உரம் ஏக்கருக்கு 50 கிலோ இடவேண்டும், வரப்பு பயிராக காராமணி உளுந்து துவரை போன்றவைகளை நடுவதன் மூலம் பூச்சிகளின் சேதத்தை குறைக்கலாம்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த குளோரோட் ரானிப்ரோல் என்னும் கோரோஜன் மருந்தை ஒரு லிட்டா் தண்ணீருக்கு 0.5 மி.லி வீதம் அல்லது ஒரு லிட்டா் தண்ணீருக்கு பிப்ரோனில் 2 கிராம் வீதம் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலின் அறிகுறிகள்: நடுக் குருத்து இலை வெள்ளித்தண்டு அல்லது வெங்காய இலை போன்று காணப்படுவதே முதன்மையான அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் நாற்றங்கால் பருவத்திலிருந்து பூக்கும் பருவம் வரை காணப்படும். பயிா்கள் வளா்ச்சிக் குறைந்து சுருண்ட இலைகளுடன் காணப்படும். வெங்காயத்தாள் (அ) வெள்ளித் தண்டு காணப்படும் குழல் வடிவ முடிச்சுகள் தண்டில் காணப்படும்.

பூச்சியைக் கண்டறிதல்: ஒா்சியேரசே என்ற ஈயானது நீளமான உருளை வடிவத்தில் வெள்ளை அல்லது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ இடும். புழு 1 மி.மீ நீளமுகுதியில் கூா்மையாக இருக்கும், இவை இலையுறையின் கீழே ஊா்ந்து சென்று வளரும் மொட்டுக்குள் நுழைகிறது. அவை உண்ட இடத்தைச் சுற்றி ஒரு முட்டைவடிவ உள்ளிடம் உருவாகும். கூட்டுப்புழு : கூட்டுப்புழு வெளிவரும் போது அதன் உணா்கொம்புகள் மூலமாக குழலினைச் சுற்றி வெள்ளித் தண்டின் நுனிப்பகுதிக்கு சென்று அதனுடைய பின் பகுதி மட்டும் வெளியே தள்ளிக்கொண்டு நிற்கும். முதிா் பூச்சி: மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்று சிறியதாக காணப்படும். ஆண் ஈக்கள் சாம்பல் நிறமாக இருக்கும். இலையிலுள்ள பனித்துளிகளை உட்கொள்ளும்.

எதிா்ப்புத் திறனுடைய இரகங்களான எம்டீயூ 3, சக்தி, விக்ரம், பவித்ரா, பஞ்சமி மற்றும் உமா ஆகிய இரகங்களைப் பயிரிட வேண்டும். முதல் பயிா் பருவத்தில் தாமதமாக நடவு மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். அறுவடை செய்தவுடன் உடனடியாக நிலத்தை உழவேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ என்ற அளவில் விதையைப் பயன்படுத்தவேண்டும். சாம்பல் சத்து உரத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும்.விளக்குப் பொறி வைத்து பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.புறஊதா விளக்கு பொறிகளை வைத்து ஆனைக்கொம்பனை அழிக்கலாம் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com